×

ஜூன் 16க்கு தள்ளிப்போனது ஆதிபுருஷ் ரிலீஸ்

ஐதராபாத்: பிரபாஸ், கீர்த்தி சனோன், சைப் அலிகான் நடிக்கும் படம் ஆதி புருஷ், இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் மொழிகளில் திரைக்கு வர உள்ளது. ராமாயணம் புராணத்தை மையப்படுத்தி இந்த படம் உருவாகியுள்ளது. இதில் ராமராக பிரபாஸ், சீதையாக கீர்த்தி சனோன், ராவணனாக சைப் அலிகான் நடித்துள்ளனர். பாலிவுட் டைரக்டர் ஓம் ராவத் இந்த படத்தை இயக்கியுள்ளார். இதில் முக்கிய நட்சத்திரங்கள் நடித்திருந்தாலும் பாதி படம் அனிமேஷனில் உருவாக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் இந்த படத்தின் டீசர் வெளியிடப்பட்டது. அதில் அனுமான் வரும் காட்சிகள் உள்பட பல காட்சிகள் அனிமேஷனில் இடம்பெற்றுள்ளது. இது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. காரணம், அந்த கிராபிக்ஸ் காட்சிகள் கார்ட்டூன் படத்தை போல இருப்பதாக கடுமையான விமர்சனங்கள் எழுந்தன.இந்த படம் வரும் ஜனவரி 12ம் தேதி திரைக்கு வரும் என கூறப்பட்டது. இந்நிலையில் படத்துக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளதால், இதன் அனிமேஷன் காட்சிகளை மாற்றியமைக்க படக்குழு முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. இதனால் படத்தின் ரிலீஸ் தள்ளிப்போகும் என்றும் சொல்லப்பட்டது. இந்நிலையில் ஜனவரி 12ம் தேதிக்கு பதிலாக அடுத்த ஆண்டு ஜூன் 16ம் தேதிக்கு இந்த படத்தின் ரீலிசை படக்குழு தள்ளிப்போட்டிருக்கிறது. இதை படத்தை தயாரிக்கும் டீ சீரிஸ் நிறுவனம் அதிகாரபூர்வமாக நேற்று அறிவித்துள்ளது. படத்துக்கு ரீ ஷூட்டிங் நடத்துவது இதன் மூலம் உறுதியாகியுள்ளது….

The post ஜூன் 16க்கு தள்ளிப்போனது ஆதிபுருஷ் ரிலீஸ் appeared first on Dinakaran.

Tags : Hyderabad ,Prabhas ,Keerthy Sanon ,Saip Ali Khan ,Adi Purush ,
× RELATED தெலங்கானாவில் நேற்றிரவு அரசு...